கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு பேருந்து மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சின்னபனமுட்லு கிராமத்தை சேர்ந்த சரத்குமார், ஹரிஷ் மற்றும் நாகன் ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரையில் உள்ள சரத்குமாரின் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, மீண்டும் சொந்த கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
ஜெகதேவி பேருந்து நிலையம் அருகே பின்னால் வேகத்தில் வந்த அரசுப் பேருந்து மோதி மூவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.