நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆறுமுகம்பட்டி பகுதியில் மார்கழி பஜனை திருவிழா நிறைவு பெற்றது.
இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறுவர்கள் பஜனைக்கு செல்வது வழக்கம். நிறைவு நாளன்று தங்கம்மன் கோயிலில் பொங்கலிட்டு அம்மனை 50-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் வழிபட்டனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பஜனை நிறைவு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.