திருப்பூரில் இருந்து சேலம் சென்ற அரசுப் பேருந்தை தணிக்கை என்ற பெயரில் அதிகாரிகள் நிறுத்தி வைத்தது பயணிகளை அதிருப்தியடைய செய்தது.
திருப்பூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது டிக்கெட் பரிசோதகர் மோகன் ராஜ், தணிக்கை என்ற பெயரில் சுமார் அரைமணி நேரம் பேருந்தை நிறுத்த வைத்துள்ளார்.
இதனால் பேருந்து ஓட்டுநர் இருளப்பனுக்கும், மோகன் ராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், உரிய நேரத்துக்கு சேலம் செல்ல முடியாமல் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.