மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கும்பகோணம் மீன் அங்காடியில் மீன்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது.
மாட்டு பொங்கலையொட்டி அசைவ உணவுகளை மக்கள் அதிகளவில் வாங்கி சமைப்பது வழக்கம். அந்த வகையில் கும்பகோணம் மீன் அங்காடியில் மீன் வாங்குவதற்காக அதிகாலை முதல் ஏராளமானோர் குவிந்தனர்.
ஒரு கிலோ கெண்டை மீன் 250 ரூபாய்க்கும், வஞ்சிரம் 750 ரூபாய்க்கும், சங்கரா 300 ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோல கானாங்கெளுத்தி, இறால், நண்டு விலையும் அதிகரித்துக் காணப்பட்டது.
இருந்தாலும், அசைவ பிரியர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவற்றை வாங்கிச் சென்றனர்.