மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டம் மாநில அரசின் ஒத்துழைப்போடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
மதுரை-தூத்துக்குடி திட்டத்தில் தமிழக அரசிடம் இருந்து நிலம் தொடர்பான எந்த பிரச்சனையும் இல்லை என ரயில்வே அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார் என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 10 ஆம் தேதி சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அந்த செய்தியாளர் சந்திப்பின் போது மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டத்திற்கு மாநில அரசு சார்பாக போதுமான நிலம் ஒதுக்கப்படவில்லை என அமைச்சர் கூறியதாக செய்தி வெளியானது.
அப்போது தொழிற்சாலையில் நிலவிய இரைச்சல் காரணமாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது.
மதுரை – தூத்துக்குடி பற்றி கேட்கப்பட்ட கேள்வி தனுஷ்கோடி திட்டத்திற்கான கேள்வியாக தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டது. மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டம் மாநில அரசின் ஒத்துழைப்போடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்று தெரிவிக்கபட்டுள்ளது.