தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள நந்தியம் பெருமான், காய்கறிகள் மற்றும் பழவகைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மாட்டு பொங்கலை ஒட்டி தஞ்சை பெரிய கோயிலில் சிவபெருமான் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறி வகைகள், பழங்கள், இனிப்புகள் என சுமார் இரண்டாயிரம் கிலோவால் சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.