நெல்லை மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்காமல் வனத்துறை அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
புதிய தமிழகம் கட்சி சார்பில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பே அனுமதி கேட்டு கடிதம் வழங்கி, அனுமதியும் வழங்கிய பிறகும் மணிமுத்தாறு சோதனை சாவடியில் வனத்துறை நீண்ட நேரம் காத்திருக்க வைத்து அலை கழித்ததாக கூறப்படுகிறது.
மேலும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்காமல் வனத்துறை வஞ்சிக்கும் நோக்கத்தோடு செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.