உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, திருக்குறள் பரப்பப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கவிஞர் வைரமுத்து வரவேற்றுள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் பூங்காவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு, கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன், மதன் கார்கி, கபிலன் வைரமுத்து ஆகியோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, பின்னணி பாடகி அபர்ணா, 10 குரல்கள் அடங்கிய திருக்குறள் பாடலை பாடி அசத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து,
70 நாடுகள் கூடி இருந்த பேரவையில் உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, திருக்குறள் பரப்பப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். திருக்குறளை உலக பொதுமறை என அறிவிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.