அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் உயிரிழந்த நவீன் குமார் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் நவீன் குமார் என்ற மாடுபிடி வீரர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்திற்கு அரசு தரப்பில் ஆறுதல் தெரிவிக்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உயிரிழந்த நவீன் குமார் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அரசு இவற்றை உடனடியாக செய்து தர வில்லை எனில் நவீன்குமாரில் உடலை வாங்க மாட்டும் எனவும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.