பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின், பந்த்ராவில் சயிப் அலிகான் வீடு உள்ளது. அங்கு அதிகாலை அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் நுழைந்தார். அப்போது அங்கிருந்த பணிப்பெண்ணுடன் அந்த மர்மநபர் வாக்குவாதம் செய்துள்ளார்.
சத்தம் கேட்டு அங்குவந்த சயிப் அலிகானை, அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த சயிப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் ஆறு இடத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.