தென்னாப்ரிக்காவில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட சுரங்கத்தில் சிக்கி தவித்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்காவின் ஸ்டில்போன்டைன் நகர் அருகே சட்டவிரோதமாக தங்க சுரங்கம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அவர்களை சரணடைய போலீசார் வலியுறுத்தி வந்தனர். ஆனால் தொழிலாளர்கள் சரணடைய மறுத்து அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தனர். மேலும் தங்க சுரங்கத்தில் இருந்து வெளியேற அவர்கள் மறுத்தனர்.
இவ்வாறு கடந்த இரண்டு மாதங்களாக சுரங்கத்தில் சிக்கித் தவித்த 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.