இரு செயற்கைக்கோள் இணைப்பு வெற்றி பெற்ற நிகழ்வு தேசத்திற்கு பெருமை சேர்க்கும் நாள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம தெரிவித்துளளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “இந்தியாவிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்! SpaDeX டாக்கிங்கின் வெற்றிக்குப் பின்னால் உள்ள இஸ்ரோ குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.
துல்லியமான திட்டமிடல் மற்றும் பொறியியல் சிறப்பின் மூலம், வெற்றிகரமான விண்வெளி டாக்கிங்கை அடைந்த நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க சாதனை பிரதமர் மோடியின், சுயசார்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. இந்த நாள் நமது தேசத்திற்கு பெருமை சேர்க்கும் நாள்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.