திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயிர் பலி கொடுக்க அனுமதிக்க கூடாது என இந்து மக்கள் கட்சி சார்பில் காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆடு மற்றும் கோழி உள்ளிட்டவை பலி கொடுக்கக் கூடாது என, பல வருடங்களாக இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக்கட்சியின் மாவட்ட தலைவர் சோலை கண்ணன், மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதனிடம் மனு அளித்தார்.
மனுவில், தமிழக அரசின் தடையை மீறி, மலை உச்சியில் உயிர் பலி கொடுப்போம் என எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் எனவும், மலையை சுற்றியுள்ள சமணர் படுக்கை மற்றும் கல்வெட்டு ஆகியவைகளை பாதுகாக்க மலை முழுவதையும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.