நடிகர் சயிஃப் அலிகானை வீடு புகுந்து கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நடிகர் சயிஃப் அலிகானின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
6 முறை கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்த சயிஃப் அலிகான், மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்குப்பின் சயிஃப் அலிகான் அபாய கட்டத்தை தாண்டியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதனிடையே, நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.