தரமற்ற சாலை அமைப்பதை ஜாமினில் வரமுடியாத குற்றமாக அறிவிக்க வேண்டுமென மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய நிதின் கட்கரி, நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை 2030-ஆம் ஆண்டுக்குள் பாதியாக குறைப்பதே நோக்கமென தெரிவித்தார்.
2023ம் ஆண்டில் மட்டும் ஏற்பட்ட 5 லட்சம் விபத்துகளில் , 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார்.
தரமற்ற சாலை அமைப்பதை ஜாமினில் வரமுடியாத குற்றமாக்க வேண்டுமென்றும், அதில் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர், பொறியாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.