அம்பாசமுத்திரம் அருகே காட்டு யானைகள் நெற்பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு பாப்பான் குளம் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அதில் தனிக் குழுவாக பிரிந்த காட்டு யானைகள், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.
இதனால் நஷ்டத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். காட்டு யானைகளின் தொந்தரவை கட்டுப்படுத்த பல முறை கோரிக்கை விடுத்தும், வனத்துறை கண்டுகொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.