ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது பாேலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வஉசி பூங்கா மைதானத்தில் காணும் பொங்கல் கொண்டாடிய பொது மக்களிடம், ஆதரவு கோரி நாதகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அனுமதியின்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாகக்கூறி, நிலை கண்காணிப்பு குழுவினர் அளித்த புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நவநீதன் உள்பட 8 பேர் மீது, இரண்டு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.