நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்காக விண்வெளியில் ஏழு மாதங்களுக்குப் பிறகு நடந்தார்.
அவரும் அவருடன் விண்வெளி மையத்துக்குச் சென்ற மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரரும் சர்வதேச விண்வெளி மையத்தின் வெளிப்பகுதிக்கு வந்து பழுதை சரிசெய்தனர். இந்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.