365 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய பத்து ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருமாறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் இன்றளவும் 15 கோடி பேர் 2ஜி பயனர்களாக உள்ளனர். இவர்கள் பயன்பெறும் வகையில், பத்து ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களை மீண்டும் அமல்படுத்த டிராய் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் இணைய வசதி தேவையில்லாதவர்களுக்கு பெரிய அளவில் ரீசார்ஜ் செய்யும் தொல்லை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.