மத்திய பட்ஜெட்டை எட்டாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.
2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, தொழில்துறை மற்றும் பல்வேறு துறையினருடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு மாத காலம் நடத்திய ஆலோசனையை கடந்த 6-ம் தேதி நிறைவு செய்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 31ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி ஒன்றாம் தேதி 2025-2026 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 2வது வாரம் முதல், ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.