சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற எருது ஆட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
தீரானூர், நாட்டாமங்கலம், சோளம்பள்ளம் ஆகிய இடங்களில் எருது ஆட்டம் நடந்தது. 100க்கும் மேற்பட்ட காளைகள் களம் இறங்கிய நிலையில் ஏராளமான இளைஞர்கள், காளைகளுக்கு எதிரில் பொம்மைகள், கருப்பு துணிகளை காட்டி அவற்றை மிரள செய்தனர். அதனைக் கண்டு மிரண்டு பல காளைகள் துள்ளி குதித்து மைதானத்திலிருந்து வெளியே ஓட்டம் பிடித்தன.
இதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளைகுட்டையில் எருது விடும் விழா நடைபெற்றது. வெள்ளைகுட்டையில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில், உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 175 காளைகள் பங்கேற்றன.
ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டு, ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கெடுக்கப்பட்டு குறைந்த நேரத்தில் இலக்கை கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனிடையே, போட்டிக்கான நேரத்தை நீட்டிக்க மறுத்த போலீசார், காளைகளை அவிழ்த்துவிட தடை விதித்தால் விழாக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், ஜோலார்பேட்டையைச் சேர்ந்த மேகநாதன் என்பவரது காளைக்கு பரிசு வழங்குதிலும் சர்ச்சை ஏற்பட்டது.