பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கே முக்கியப்பங்கு இருப்பதாக யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதில், வேந்தருக்கே சிறப்புரிமை வழங்கப்பட்டு வருவதாக ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட யுஜிசி விதிகளிலும் துணைவேந்தரை நியமனத்தில் வேந்தரின் முடிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜகதீஷ் குமார்
மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு இந்த விதி பொருந்தும் எனவும் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டுதலுக்கு மாநில அரசுகள் இணங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.