கரூரில் ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் இரும்புத்துண்டு வைக்கப்பட்டது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தாந்தோணி ரயில்வே கேட் வடக்கு பகுதியில் கரூர் – திண்டுக்கல் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் இரும்பு துண்டு வைத்துள்ளனர்.
அப்போது வந்த கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் சென்ற போது இன்ஜினின் முன் சக்கரத்தில் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.