திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி கோயில் அருகே உள்ள கடற்கரை பகுதிகள், கடல் சீற்றம் காரணமாக அரிப்பு ஏற்பட்டுள்ளது.
அனல்மின் நிலைய துறைமுகம் அமைப்பதற்கு, கடலில் கொட்டப்படும் கற்களால் கடல் அரிப்பு ஏற்படுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டினர்.
இந்நிலையில், கடற்கரை பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினை சரி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சென்னை ஐஐடியினர், அறநிலையத்துறையினர், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, திமுக எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.