அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழா உள் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப் நாளை மறுதினம் பதவியேற்க உள்ளார். இதனிடையே, ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள அமெரிக்க கேபிடலின் மையத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திறந்தவெளி பகுதியில் பதவியேற்பு விழாவை நடத்தாமல், அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், பதவியேற்பு நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்றும், ஜனாதிபதி அணிவகுப்பு மற்றும் பிற நடவடிக்கைகள் திட்டமிட்டபடி தொடரும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.