ஒடிசாவில் உள்ள கைவினை அருங்காட்சியகத்தை சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் பார்வையிட்டார்.
இந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில், ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் அரசு சார்பில் நடைபெற்ற கைவினை அருங்காட்சியம் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்து கொண்டார். அப்போது, அவரை ஒடிசா ஆளுநர் ஹரி பாபு கம்பம்பதி மற்றும் முதலமைச்சர் மோகன் சரண் மாஜி ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களை அதிபர் பார்வையிட்டபோது அவரது மனைவி யுபிஐ மூலம் பணத்தை செலுத்தி கைத்தறி சேலை வாங்கினார்.