கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வழக்கமான உற்சாகத்துடன் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
நீருக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் ஐந்தாம் நாள் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி தென்பெண்ணையாற்றின் கரையோரங்களில், அமைந்துள்ள கோயில்களில் உள்ள உற்சவ தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில், வெளிநாட்டினர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.