கள்ளக்குறிச்சி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் மர்மமான முறையில் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே உள்ள ஊராங்கன்னியில் துரைராஜ் என்பவர், தனது விவசாய நிலத்தில் புறா மற்றும் கோழி உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார்.
பொங்கல் பண்டிக்கைக்காக வெளியே சென்ற துரைராஜ் திரும்பி வந்து பார்த்தபோது, நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விஷம் கலந்த அரிசியை புறாக்கள் சாப்பிட்டதால் உயிரிழந்து இருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.