டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு மொத்தம் ஆயிரத்து 521 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் 680 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு மொத்தம் ஆயிரத்து 521 வேட்புமனுக்களை 981 வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனுக்களை வரும் 20ஆம் தேதிக்குள் திரும்பப் பெற்று கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.