பழம்பெரும் நடிகரும், அரசியல்வாதியுமான என்டிஆரின் நினைவு தினத்தையொட்டி ஹைதராபாத்தில் உள்ள நினைவிடத்தில் அவரது பேரன் ஜூனியர் என்டிஆர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பழம்பெரும் நடிகர் என்டிஆரின் 29வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள என்டிஆர் நினைவிடத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர். திரைத்துறையினரும், ரசிகர்களும் என்டிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.