இங்கிலாந்து லாட்டரியில் 80 கோடி ரூபாய் பரிசு வென்ற இளைஞர் மறுநாள் வழக்கம்போல வேலைக்கு சென்ற சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.
இங்கிலாந்தின் கார்லிஸ் பகுதியை சேர்ந்த 20 வயதான ஜேம்ஸ் கிளார்க்சன், கொரோனா காலத்தில் படிப்பை கைவிட்டுவிட்டு தெருக்களில் வடிகால் பிரச்சனைகளை சரி செய்யும் பணியில் சேர்ந்தார்.
இவர் சமீபத்தில் வாங்கிய லாட்டரிக்கு இந்திய மதிப்பில் சுமார் 80 கோடி ரூபாய் பரிசு விழுந்தது. ஆனாலும் அவர் மறுநாள் தனது அன்றாட பணிக்கு சென்று வடிகால்களை சுத்தம் செய்துள்ளார். ஜேம்ஸ் கிளார்க்சனின் இந்த செயல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.