ஹமாஸ் அமைப்பினர் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
15 மாதங்களுக்கு மேலாக நடைபெறும் இந்த போரை நிறுத்துவதற்காக கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக இருதரப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. போா்நிறுத்த வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு அண்மையில் ஏற்றுக்கொண்ட நிலை
யில், தற்போது இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. காஸாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் நிறுத்தம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.