அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரே நாளில் 2 ஆயிரத்து 500 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
அமெரிக்காவில் சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்து 500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோ பைடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடாத போதும் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டதால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியதாக பைடன் கூறியுள்ளார்.