கட்டாயம் ஏற்பட்டால் மீண்டும் ஹமாசுக்கு எதிராக போரை தொடங்குவோம் என, இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – காசா இடையேயான போர் 15 மாதங்களுக்கு மேலாக நீடித்துவந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட நிலையில், போரை நிறுத்த பல்வேறு நாடுகள் குரல் கொடுத்து வந்தன. இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் விவரங்களை வெளியிடும் வரை போர் நிறுத்தத்தை முன்னெடுத்து செல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா உதவியுடன் போரை மீண்டும் தொடங்குவதற்கான உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது எனவும் கூறியுள்ளார்.