தொடர் விடுமுறை முடிந்து மக்கள் தங்கள் பணியிடங்களுக்கு புறப்பட்டதால், சேலம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் தொடர் விடுமுறையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடிய தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், தங்கள் பணியிடங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் திரும்புவதற்காக புறப்பட்டனர்.
குறிப்பாக சேலத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதால், சேலம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதாகவும், பேருந்துகளுக்காக வெகு நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.