ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில், ஆரத்தி எடுத்தவருக்கு திமுக நிர்வாகிகள் பணம் வழங்கியதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக மாணவரணியை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் 12வது திமுக வார்டு செயலாளர் வினோத்குமார் ஆகியோர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.