ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பலத்த சூறை காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் ராமநாத சுவாமி கோயில் பிரகாரத்திற்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.
தொடர்ந்து கோயில் வளகாத்திற்குள் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.