கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்த ரஷ்ய நடன கலைஞர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தியா – ரஷ்யா நட்பு உறவு கழகம் சார்பில் ஆண்டுதோறும் இருநாட்டு நடன கலைஞர்களும் கலாச்சார பரிமாற்ற திட்டத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நடப்பாண்டு ரஷ்யாவில் இருந்து 20 பேர் கொண்ட கலாச்சார குழுவினர் பொள்ளாச்சி வந்துள்ளனர். ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ரஷ்யா நடன குழுவினருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆழியாறு அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்த ரஷ்ய நடன கலைஞர்கள், குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.