நாமக்கல் அருகே முட்டை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சேதமடைந்தன.
நல்லையபட்டியை சேர்ந்த துரைசாமி என்பவர் சரக்கு வாகனத்தில் முட்டைகளை ஏற்றி திண்டுக்கல்லை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது என்.புதுப்பட்டி அருகே முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றதால் வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான முட்டைகள் உடைந்து நொறுங்கின.