ஜம்மு காஷ்மீர் – நெல்லை வாராந்திர ரயிலில் உள்ள பெட்டிகள் அசுத்தமாக இருப்பதாக பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவ தேவி கட்ராவிலிருந்து நெல்லை வரை இயக்கப்படும் வாராந்திர ரயிலில், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்கு செல்லும் வழியில் காலி பாட்டில்கள், நெகிழி பைகள் குவிந்து குப்பைமேடு போல் காட்சியளித்ததால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கரூரைச் சேர்ந்த பயணி ஒருவர் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.