வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வக்ஃபு வாரிய மசோதா தொடர்புடைய அறிக்கை தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் ஜகதாம்பிகா பால் தெரிவித்தார்.
வக்ஃபு வாரியம் சம்பந்தப்பட்ட சொத்துகளை நிர்வகிக்கும் குழுவில் பெண்களும் இடம்பெறும் வகையில், மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்ததால், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்குஅனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த ஆறு மாதமாக இக்குழு விரிவான ஆய்வு நடத்தி வந்த நிலையில், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அதன் தலைவர் ஜகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார்.