என்சிசி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கெளரவித்தார்.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் நாடு முழுவதும் இருந்து என்சிசி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இதையொட்டி, தினந்தோறும் அதிகாலை கடமைப் பாதையில் ராணுவ வீரர்களுடன் இணைந்து என்சிசி மாணவர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் முகாமிட்டுள்ள மாணவர்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.
















