சாலைப்போக்குவரத்து மாதத்தை முன்னிட்டு சேலம் அஸ்தம்பட்டியில் சாலை விதிகளை மதிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை விதிகளை மதிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், சேலம் மாநகரப் போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை விதிகளை மதிக்காமல் இருந்தால், ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து தத்ரூபமாக நடித்து காட்டப்பட்டது.
எமதர்மர் வேடம் அணிந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.