திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குப்பை சேகரிப்பு வாகனத்தை உரிய அனுமதியின்றி விற்பனை செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலங்காயம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், குப்பைகளை சேகரிக்க 3 சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வாணியம்பாடியில் உள்ள இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், பழுதடைந்த பேரூராட்சி குப்பை வாகனம் ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக பழுதடைந்த வாகனங்கள், உயரதிகாரிகள் அனுமதியோடு ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த நிலையில், வாகனத்தை விற்பனை செய்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.