திருப்பத்தூர் அருகே செயல்படும் யூனியன் வங்கியில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் யூனியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி 10 நாட்களாகியும் நகை திருப்பி அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வங்கியில் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட எந்த சேவைகளும் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.