சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் இடம்பெறாதது அதிர்ச்சி அளிப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாகவும், அவர் ஒரு கேம் சேஞ்சர் எனவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.