ராசிபுரம் அருகே கடன் தொல்லையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கட்டனாச்சம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மாரிமுத்து என்பவரிடம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.
தொகையை விரைந்து செலுத்தும்படி கூறி கடன் தந்தவர் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சலுக்கு உள்ளான செல்வக்குமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.