சென்னை கடற்கரையோரங்களில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதற்கு விசைப்படகுகளே காரணம் என காசிமேடு மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆமைகள் உயிரிழப்பு தொடர்பாக காசிமேடு மீன்பிடி உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட படகுகளால்தான் ஆமைகள் இறப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்தகைய விசைப்படகுகள் காசிமேட்டில் இல்லை என்றும், காரைக்காலில் இருந்து வரும் விசைப்படகுகளே காரணம் எனவும், காசிமேடு பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அதிவேக விசைப்படகுகள் காசிமேட்டில் இருந்தால் பறிமுதல் செய்து கொள்ளுங்கள் எனவும் அவர்கள் கூறினர்.