சென்னை ஆர்.கே.நகர் காவல்நிலையம் முன் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், போலீசார் தான் அளித்த புகாரை ஏற்க மறுத்ததாக அவர் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் பட்டறையில் பணிபுரிந்து வந்தார். இரவு ஆர்.கே.நகர் காவல்நிலையத்திற்கு சென்ற அவர் திடீரென தனது உடம்பில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டார். தீ மளமளவெற பற்றி எரிந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்களும், காவல்துறையினரும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இதில் பலத்த காயமடைந்த ராஜன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தன்னோடு பணிபுரிந்த சிலர் கஞ்சா போதையில் தன்னை தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாகவும், இது குறித்து புகாரளித்தால் அதை ஏற்க போலீசார் மறுத்துவிட்டதாகவும் ராஜன் மனமுடைந்து பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.