தேனி மாவட்டம் ஏ.புதுப்பட்டி பகுதியில் ரேஷன் பொருட்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், டிராக்டரில் இருந்த அரிசி மூட்டைகள் மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் சாலையில் சிதறி வீணாகின. அதனைக் கண்ட பொதுமக்கள், ரேஷன் பொருட்களை கடத்தி வந்ததாக குற்றம்சாட்டினர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தென்கரை பகுதி ரேஷன் கடைக்கு பொருட்களை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து சாலையில் சிதறிக் கிடந்த அரிசி மூட்டைகள் மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் மற்றொரு டிராக்டரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.